உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நாற்றுகளை சேதப்படுத்தும் பறவைகள் விவசாயிகள் தவிப்பு

நாற்றுகளை சேதப்படுத்தும் பறவைகள் விவசாயிகள் தவிப்பு

திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தியில் நெல் நாற்றுகளை பறவைகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் திகைத்து வருகின்றனர். திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் கோடை விவசாயம் குறைந்த பரப்பளவில் செய்யப்படுகிறது. இந்தாண்டு கோடை மழை ஏதும் பெய்யாத நிலையில் பெரும்பாலான விவசாயிகள் கோடை விவசாயத்தில் ஈடுபடவே இல்லை. திருப்பாச்சேத்தி, மழவராயனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் பம்ப்செட் கிணறு வைத்துள்ள விவசாயிகள் கோ 61, என்.எல்.ஆர்., உள்ளிட்ட ரகங்களை பயிரிட்டு வருகின்றனர்.திருப்பாச்சேத்தி சுற்றுவட்டார பகுதிகளில் 75 ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. கோடை வெப்பம் காரணமாக நீர் நிலைகள் வறண்டு வருகிறது.பறவைகள் தண்ணீர் தேடி இடம் மாறி வருகின்றன. திருப்பாச்சேத்தி பகுதியில் பெரும்பாலும் நாற்றங்கால் அமைத்து அதன்பின் அதனை பறித்து நடவு செய்வது வழக்கம், நடவு செய்த வயல்களில் கருப்பு நாரை, வெள்ளை கொக்கு உள்ளிட்டவை கூட்டம் கூட்டமாக வந்து நடவு செய்த நாற்றுகளை மிதித்து சேதப்படுத்தி விடுகிறது.திருப்பாச்சேத்தி இளங்கோ கூறுகையில்: கோடை விவசாயத்திற்கு மானிய விலையில் விதை நெல் வழங்கப்படுவதில்லை. ஒரு மூடை (50 கிலோ ) மானிய விலையில் ஆயிரத்து 200 ரூபாய் என விற்பனை செய்யப்படும், மானியம் இன்றி ஒரு மூடை ஆயிரத்து 500 ரூபாய் என வாங்கி நடவு செய்துள்ள நிலையில் பறவைகளால் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. பறவைகளை விரட்டவே முடியவில்லை. 20 சதவிகித நாற்றுகளை சேதப்படுத்தி விடுகிறது.மழை இல்லாத நிலையில் கிணற்று தண்ணீரை நம்பியே பயிரிட்டுள்ளோம், ஓரளவிற்கு கோடை மழை பெய்தால் விளைச்சல் நன்றாக இருக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி