உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கீழடி அருங்காட்சியகத்தில் சங்க கால பூக்கள், மரங்கள்

கீழடி அருங்காட்சியகத்தில் சங்க கால பூக்கள், மரங்கள்

கீழடி: சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தில் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் பயன்படுத்திய சங்கு வளையல், தங்க அணிகலன், வரிவடிவ எழுத்துக்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சங்க கால இலக்கியப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள நள்ளிருள் நாறி, மயிலை, மருதம், ஆரம், ஏழிலை பாலை பூக்கள், செடிகளை கடந்த மூன்று மாத காலமாக பயிரிட்டு வளர்த்துள்ளனர். பாண்டிய மன்னர்களின் காவல் தெய்வமாக வேப்ப மரம் போற்றப்பட்டுள்ளதாகவும், போரில் வெற்றி பெற்று வரும் படை தளபதிகள் காயம் பட்ட வீரர்களை பற்றி மன்னர்களிடம் காட்டும் போது வேம்பு பூக்களை வேல் கம்பின் நுனியில் மாலையாக அணிவித்த பின் காட்டப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அருங்காட்சியக வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட செடிகள், மரங்களை பயிரிட்டு பார்வையாளர்களுக்கு விளக்கங்களுடன் காட்சிப்படுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி