உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / 26 பள்ளிகளுக்கு வனத்துறை ‛பசுமை விருது * வனத்துறை அறிவிப்பு

26 பள்ளிகளுக்கு வனத்துறை ‛பசுமை விருது * வனத்துறை அறிவிப்பு

சிவகங்கை:தமிழகத்தில் காய்கறி தோட்டம், சோலார் பேனல் மூலம் மின்வசதி பெறுதல் போன்ற திட்டங்களை செயல்படுத்தியதில் சிறந்த 26 அரசு பள்ளிகளுக்கு வனத்துறை சார்பில் 'பசுமை பள்ளி விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் சுற்றுச்சுழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. 2023- - 2024 ம் ஆண்டில் பசுமை சக்தியை ஏற்படுத்தும் நோக்கில் பள்ளியில் 'சோலார் பவர் பிளான்ட் 'அமைத்தல், குடிநீர் மின் மோட்டார்களை சோலார் பிளான்ட்' மூலம் இயக்குதல், பள்ளி வளாகத்தில் சிறிய வனக்காடு உருவாக்குதல், இயற்கை உரங்களை பயன்படுத்தி பள்ளி வளாகத்தில் காய்கறி மற்றும் மூலிகை தோட்டம் அமைத்தல், மழை நீர் சேகரிப்பு, சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பள்ளியை செயல்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களுக்காக 'பசுமை பள்ளி விருது' மாநில வனத்துறை சார்பில் வழங்கப்படுகிறது. இந்தாண்டு தமிழகத்தில் 26 பள்ளிகளுக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டது. இவ்விருது மூலம் தலா ஒரு பள்ளிக்கு ரூ.20 லட்சம் வீதம் வழங்க வனத்துறை ரூ.5.20 கோடி ஒதுக்கியுள்ளது.சிவகங்கையில் கண்ணங்குடி அரசு பள்ளி, தேனியில் ஓடைப்பட்டி, ஜெயமங்கலம், ஆசாரிபட்டி பள்ளிகள், விருதுநகரில் சந்திரபட்டி, பூவநாதபுரம் அரசு பள்ளிகள், ராமநாதபுரத்தில் சத்திரக்குடி, திருவாடானை, மதுரையில் தெற்குவாசல் மாசாத்தியார் மாநகராட்சி பள்ளி உள்ளிட்டவை விருது பெற உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை