உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அல்லிநகரம் கோயிலில் முதல் மரியாதை கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு 

அல்லிநகரம் கோயிலில் முதல் மரியாதை கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு 

மதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அல்லிநகரம் கோயில் திருவிழாவில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கப்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.அல்லிநகரம் ஈஸ்வரன் தாக்கல் செய்த மனு:அல்லிநகரம் தண்டீஸ்வர அய்யனார் கோயில் திருவிழா மே 15 முதல் 25 வரை நடைபெறும். அரசியல் அல்லது செல்வாக்கு மிக்க நபர் அல்லது வகையறாவாக இருந்தாலும் யாருக்கும் முதல் மரியாதை அளிக்காமல் இருப்பதை உறுதி செய்யக்கோரி அறநிலையத்துறை மடப்புரம் உதவி கமிஷனருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி சி.சரவணன் விசாரித்தார்.கோயிலில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கும் வழக்கம் இல்லை என அரசு தரப்பு தெரிவித்தது.நீதிபதி: யாருக்காவது முதல் மரியாதை அளிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இருந்தால், இந்நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு உரிமை உண்டு. யாருக்கும் கோயில் வளாகத்தில் முதல் மரியாதை அளிக்கப்படவில்லை என்பதை கலெக்டர், அறநிலையத்துறை உதவி கமிஷனர், திருப்புவனம் தாசில்தார், இன்ஸ்பெக்டர் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை