உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் இயந்திரத்தில் சின்னம் ஒட்டும் பணி

மானாமதுரையில் இயந்திரத்தில் சின்னம் ஒட்டும் பணி

மானாமதுரை : சிவகங்கை லோக்சபா தேர்தலுக்காக மானாமதுரை சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடிகளுக்குரிய இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள்,சின்னங்கள் ஒட்டும் பணி நடைபெற்று வருகின்றன. மானாமதுரை சட்டசபை தொகுதிக்குட்பட்ட மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி தாலுகாவிற்கு உட்பட்ட 324 ஒட்டுச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்படவுள்ள இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் ஒட்டும் பணி மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.இப்பணிகளை மாவட்ட கலெக்டரும் தேர்தல் அலுவலருமான ஆஷா அஜித் மற்றும் டி.ஆர்.ஓ., மோகனச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர்.மானாமதுரை சட்டசபை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயமணி தாசில்தார் ராஜா மண்டல துணை தாசில்தார் உமா மீனாட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அலுவலர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ