உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தீவன பயிர் சாகுபடிக்கு ஊக்கத்தொகை: கால்நடைத்துறை தகவல் 

தீவன பயிர் சாகுபடிக்கு ஊக்கத்தொகை: கால்நடைத்துறை தகவல் 

சிவகங்கை : தோட்டத்தில் தீவன பயிர் சாகுபடியை அதிகரிக்க, கால்நடை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என சிவகங்கை மண்டல கால்நடைதுறை இணை இயக்குனர் (பொறுப்பு) நந்தகோபால் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: ஒருங்கிணைந்த தீவன மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், தோட்டம், பழத்தோட்டங்களில் ஊடுபயிர் முறையில் தீவன பயிர்கள் சாகுபடியை பெருக்க கால்நடை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பயன்பெற சொந்தமாக கால்நடை இருக்கவேண்டும்.தோட்டம், பழத்தோட்டங்கள் குறைந்தது 0.50 ஏக்கர் முதல் அதிகபட்சம் ஒரு எக்டேர் வரை நீர்பாசன வசதியுடன் இருக்க வேண்டும். தொடர்ந்து 3 ஆண்டு தீவன பயிர்களை பராமரிக்க வேண்டும். அதிக தீவன பயிர்களை நிலமற்ற பிற கால்நடை வளர்ப்போருக்கு குறைந்த விலைக்கு விற்கலாம். உரிய முன்னுரிமை அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.புற்கள், பருப்பு வகை, மேய்ச்சல் புற்கள் போன்ற தீவனப்பயிர்களை பயிரிட விரும்பும் கால்நடை வளர்ப்போர் அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ