உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பஸ்களில் இருக்கை மறுப்பு பயணிகளிடம் விசாரணை

பஸ்களில் இருக்கை மறுப்பு பயணிகளிடம் விசாரணை

திருப்புத்துார் -: திருப்புத்துார் பஸ் ஸ்டாண்டில மதுரை பஸ்களில் பயணிகளுக்கு இருக்கை தரமறுப்பது குறித்து போலீஸ் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை செய்தனர். திருப்புத்துார் பயணிகளுக்கு மதுரை போன்ற ஊர்களிலிருந்து வரும் போதும், செல்லும் போதும் பஸ்களில் இருக்கை தர மறுப்பதும், அமர்ந்தவர்களை எழுந்து நிற்க சொல்வது குறித்த புகார் குறித்து கலெக்டர் ஆஷா அஜித் விசாரிக்க அறிவுறுத்தினார். இதனையடுத்து ஆர்.டி.ஓ., மூக்கன் மற்றும் டி.எஸ்.பி. ஆத்மநாதன் தலைமையில் போலீசார் திருப்புத்துார் பஸ் ஸ்டாண்டில் பயணிகளிடம் விசாரித்தனர். பஸ்களிலிருந்து இறங்கி வந்த பயணிகளிடம் விசாரிக்கையில், 'கூட்டம் அதிகமான, விழா, முகூர்த்த நேரங்களில் இந்த பிரச்னை உள்ளதால் பெண்கள், முதியவர்கள் குழந்தைகள், நோயாளிகள்படும் சிரமம்' குறித்து தெரிவித்தனர். தொடர்ந்து அரசு,தனியார் பஸ் பணியாளர்கள், டைம் கீப்பர்கள் ஆகியோரிடம் அதிகாரிகள் 'முதலில் வரும் பயணியருக்கு முதலில் டிக்கெட் மற்றும் இருக்கை வழங்கவும், போக்குவரத்து விதிகளை மீறினால் ஓட்டுனர்,நடத்துனர், டைம் கீப்பர் மீது நடவடிக்கை எடுக்கவும், பஸ் வழித்தடம் ரத்து செய்யப்படும்' என்று எச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ