உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மண் சாலையாக மாறிய கல்லுாரி சாலை

மண் சாலையாக மாறிய கல்லுாரி சாலை

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை., அழகப்பா அரசு கலைக் கல்லுாரி, அழகப்பா உடற் கல்வியியல் கல்லுாரி மற்றும் அரசு மற்றும் தனியார், பள்ளி, கல்லுாரிகளுக்கு ஏராளமான மாணவ மாணவிகள் வந்து செல்கின்றனர். மேலும் காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகமும் இங்கு செயல்படுகிறது.கோட்டையூர் கண்டனுார் அறந்தாங்கி செல்லும் முக்கியச் சாலையாக இச்சாலை உள்ளது. இந்த சாலை ஓரம் முழுவதும் மணல் பரப்பாக காணப்படுகிறது. சாலை முறையாக பராமரிக்கப்படாததால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி