உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடி -- பெங்களூரு ரயில் இயக்கவேண்டும்

காரைக்குடி -- பெங்களூரு ரயில் இயக்கவேண்டும்

காரைக்குடி: காரைக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காரைக்குடி ரயில் பயணிகள் நலச்சங்கம் கிழக்கு கடற்கரை ரயில் பயணிகள் கூட்டமைப்பின் சார்பில் நடந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், தலைவர் ராமநாதன், சென்னை ரயில்வே பொது மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், காரைக்குடி முதல் பெங்களூர் வரை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் இயக்க வேண்டும். ராமேஸ்வரம் முதல் கோவைக்கு செல்லும் வாராந்திர ரயிலை 3 முறை இயக்கவேண்டும். காரைக்குடி டூ திண்டுக்கல் வரை திருப்புத்துார், சிங்கம்புணரி, நத்தம் வழியாக புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் . செங்கோட்டை டூ தாம்பரம் விரைவு ரயில் காரைக்குடி வழியில் தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி