உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / புதிய பஸ்களே நடுரோட்டில் பழுதாகும் அவலம்: அலட்சிய அதிகாரிகளால் பயணிகள் பரிதவிப்பு

புதிய பஸ்களே நடுரோட்டில் பழுதாகும் அவலம்: அலட்சிய அதிகாரிகளால் பயணிகள் பரிதவிப்பு

திருப்புவனம்:' மதுரை -பரமக்குடி நான்கு வழிச்சாலையில் தினசரி புதிய அரசு பஸ்களே பழுதாகி வழியில் நிற்பது பயணிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரையில் இருந்து திருப்புவனம்,திருப்பாச்சேத்தி வழியாக ராமேஸ்வரம், பரமக்குடி, கமுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு மதுரை, கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தொலை துாரங்களில் இருந்து ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் ரயில் போக்குவரத்து இல்லாததால் அரசு பஸ்களையே நம்பியுள்ளனர். கடந்த சில மாதங்களாக தொலை துார அரசு பஸ்கள் பல நடுவழியில் பழுதாகி பயணிகளை பரிதவிக்க விடுகிறது.நேற்று காலை முதல் மதியம் வரை மதுரை சிப்காட் பணிமனையைச் சேர்ந்த டி.என். 58என் 2545 என்ற எண்ணுள்ள அரசு பஸ் மதுரை செல்லும் வழியில் ரேடியேட்டர் பழுது காரணமாக நான்கு வழிச்சாலையில் திருப்புவனம் அருகே தட்டான்குளம் என்ற இடத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. நள்ளிரவில் ரேடியேட்டர் பழுதானதாகவும் பயணிகளை அடுத்தடுத்து வந்த பஸ்களில் ஏற்றி அனுப்பியதாகவும் பணிமனையில் இருந்து மெக்கானிக்குகள் வந்து பழுதை சரி செய்து வருவதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.சமீப காலமாக பழைய பேருந்துகளை விட புதிய ஊதா மற்றும் மஞ்சள் நிற பஸ்கள் அதிகம் பழுதாகி வருகின்றன.ஏற்கனவே திருப்புவனம் கிளை பணிமனையில் 43 டவுன் பஸ்கள் மூலம் தினசரி மூன்று லட்ச ரூபாய் வருவாய் ஈட்டிய நிலையில் தற்போது ஐம்பதாயிரம் ரூபாய் மட்டுமே வருவாய் வருவதாகவும் பஸ்கள் பராமரிக்க கூட இந்த தொகை போதுமானதாக இல்லை எனவும் போக்குவரத்து ஊழியர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் அரசு பஸ்கள் அடுத்தடுத்து பழுதாகி பயணிகளை பரிதவிக்க விடுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே தமிழக அரசு பஸ்கள் பராமரித்து போதிய பாதுகாப்புடன் இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை