உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வாகனங்களுக்கு அபராதம்

வாகனங்களுக்கு அபராதம்

காரைக்குடி, : காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் மதுரை திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், பழநி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. பயணிகளை இறக்கி விடுவதற்கு ஆட்டோக்கள் மற்றும் பைக், கார் பஸ்ஸ்டாண்டிற்குள் வந்து செல்கின்றன. பஸ்ஸ்டாண்டிற்குள் கார் பைக் ஆட்டோ வருவதால் பல்வேறு பிரச்னை நிலவுவதாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் பஸ் ஸ்டாண்டிற்குள் ஆட்டோ கார் பைக் உள்ளிட்ட வாகனங்கள் வரக்கூடாது என்று எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். நேற்று பஸ் ஸ்டாண்டிற்குள் விதிமுறைகளை மீறி நிறுத்தி வைத்திருந்த வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி