| ADDED : ஜூன் 11, 2024 10:59 PM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நிலங்களின் சர்வே எண் படி அந்தந்த நிலத்தின் சந்தை மதிப்பு வழிகாட்டி பதிவேடு வெளியிட்டுள்ளதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:நிலங்களின் சந்தை வழிகாட்டி மதிப்பினை சீரமைப்பது தொடர்பாக சொத்துக்களின் சந்தை மதிப்பு வழிகாட்டி தயாரிக்க விலை மதிப்பீடு செய்தல், அதை வெளியிடுதல், திருத்தியமைக்க மதிப்பீட்டு குழு ஏற்படுத்துதல் போன்றவற்றிற்காக மைய மதிப்பீட்டு குழு நிர்ணயம் செய்த கோட்பாட்டிற்கு இணங்க இம்மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாகவும் சர்வே எண்ணின் படி சந்தை மதிப்பிற்கான விலை பட்டியல், வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த வழிகாட்டி பதிவேடு பட்டியல் அந்தந்த தாசில்தார், பத்திர பதிவு சார்பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.இந்த விலை மதிப்பீட்டு பட்டியலின் மீது பொதுமக்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை மற்றும் கருத்துக்கள் இருந்தால், அந்த ஆட்சேபனையை 15 நாட்களுக்குள் கலெக்டர் தலைமையில், சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மதிப்பீட்டு துணைக்குழுவிடம் நேரிலோ, தபால் மூலமோ தெரிவிக்கலாம்.இக்கருத்துக்களின் அடிப்படையில் வருவாய் கிராமம் வாரியாக சர்வே எண்ணின்படி நிலங்களின் சந்தை மதிப்பு விலை மதிப்பீடு குறித்து முடிவு எடுக்கப்படும்.இது குறித்து www.tnreginet.gov.inஇணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம், என்றார்.