உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குறைதீர் கூட்டத்தில் ரூ.4 லட்சம் நிவாரணம்

குறைதீர் கூட்டத்தில் ரூ.4 லட்சம் நிவாரணம்

சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில், 400க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இறப்பு நிவாரண தொகையாக 4 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.4 லட்சத்தை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் பிற்பட்டோர் நல அலுவலர் ஜெயமணி, மாவட்ட வழங்கல் அலுவலர் சபிதாள் பேகம், ஆதிதிராவிடர் நல அலுவலர் சுரேஷ்குமார், உதவி கமிஷனர் (ஆயம்) ரங்கநாதன் உட்பட தாசில்தார், வருவாய்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ