உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மண்சரிந்து ரோடு சேதமாகும் அபாயம்

மண்சரிந்து ரோடு சேதமாகும் அபாயம்

திருக்கோஷ்டியூர்: திருப்புத்துார் அருகே நரியங்குடியிலிருந்துகருங்குளம் செல்லும் ரோட்டில் கிராவல் மண் போடாததால் புதிய ரோடு சேதமாகும் அபாயம் உள்ளது.இப்பகுதியில் திருப்புத்துார், கல்லல், காளையார்கோயில் ஒன்றியங்கள் சந்திக்கின்றன. கத்தாளம்பட்டு, நரியங்குடி, கருங்குளம் வழியாக செல்லும் ரோடு அண்மையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஒற்றை ரோடான இதன் இருபுறமும் உறுதியான கிராவல் மண் போடப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் நெகிழ்வான மண் போடப்பட்டு, அதன் மேல் கிராவல் மண் துாவப்பட்டுள்ளது. ரோட்டின் இருபுறமும் அண்மையில் பெய்த மழைக்கே மண் சரியத்துவங்கி விட்டது.புதிய ரோடு முழுவதும் பல இடங்களில் மண் சரிந்துள்ளதால் சேதமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ