உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இனி ‛டேப்லெட் உதவியுடன்  மாணவர்களுக்கு கற்பித்தல் பணி  தொடக்க பள்ளிகளில் நவீனமயம்   

இனி ‛டேப்லெட் உதவியுடன்  மாணவர்களுக்கு கற்பித்தல் பணி  தொடக்க பள்ளிகளில் நவீனமயம்   

சிவகங்கை : தொடக்க கல்வியில் எளிமையாகிறது கற்பித்தல் பணி,சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர்கள் இனி 'டேப்லெட்' உதவியுடன் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க உள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் அரசு தொடக்க கல்வி துறையின் கீழ் செயல்படும் அனைத்து தொடக்க பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு எளிமையான முறையில் கல்வி கற்பிக்க ஏதுவாக ஆசிரியர்களுக்கு 'டேப்லெட்' வழங்கப்பட உள்ளது. இந்த 'டேப் லெட்' உதவியுடன் ஆசிரியர் வருகை பதிவை பதிவு செய்தல், 'எமிஸ்'-ல் மாணவர்களின் விபரங்களை பூர்த்தி செய்தல், அரசு வழங்கும் பாட வாரியான குறிப்புகளை 'டேப்லெட்' மூலம் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பித்தல் உள்ளிட்ட பல்வேறு கற்பித்தல் பணிகளுக்காக அரசு தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு இக்கருவியை விரைவில் வழங்க உள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 729 அரசு தொடக்க பள்ளிகளில் பணிபுரியும் பள்ளி தலைமை ஆசிரியர், பாட ஆசிரியர்களுக்கு வழங்க கல்வி மாவட்ட வாரியாக 'டேப்லெட்' ஒதுக்கீடு செய்துள்ளனர். சிவகங்கைக்கு 1069,தேவகோட்டைக்கு 1090 என ஒட்டு மொத்தமாக 2159 'டேப்லெட்' சிவகங்கைக்கு வந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை