உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / செம்பனுார் ஊராட்சி கள்ளிக்குடியில் குடிநீர் குழாய் பதிப்பதில் இழுபறி மக்கள் தவிப்பு 

செம்பனுார் ஊராட்சி கள்ளிக்குடியில் குடிநீர் குழாய் பதிப்பதில் இழுபறி மக்கள் தவிப்பு 

சிவகங்கை : காளையார்கோவில் ஒன்றியம், செம்பனுார் ஊராட்சி கள்ளிக்குடியில் வீடுகள் தோறும் குடிநீர் குழாய் பதித்தல், நெல் களம் உள்ளிட்ட அடிப்படை பணிகள் நடைபெறவில்லை என அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.காளையார்கோவில் ஒன்றியம், செம்பனுார் ஊராட்சிக்குட்பட்ட கள்ளிக்குடி உள்ளிட்ட கிராமங்களில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. கள்ளிக்குடியில் 50 வீடுகளுக்கு 10 வீட்டிற்கும், கண்ணகிபுரத்தில் 2 வீட்டிற்கு மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு வழங்கியுள்ளனர். எஞ்சிய வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படவில்லை.நெற்களம் மற்றும் குளிக்கும் தொட்டி கட்டுதல்உள்ளிட்ட பெரும்பாலான கட்டுமான பணியும் நடக்கவில்லை. கிராமத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.செம்பனுார் ஊராட்சி தலைவர் ராக்கம்மாள் கூறியதாவது: கள்ளிக்குடியில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதை சிலர் தடுத்தனர். இதனால், குடிநீர் வசதியில்லாத இரும்பூர் கிராமத்திற்கு குழாய் இணைப்பு கொடுத்துள்ளோம். தொடர்ந்து அடுத்தடுத்து வரும் திட்டம் மூலம் கள்ளிக்குடி மக்களுக்கு ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் குழாய் இணைப்பு பெற்றுத்தரப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை