உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துார் பெரியார் நகரில் வடிகால்,ரோடு வசதி தேவை

திருப்புத்துார் பெரியார் நகரில் வடிகால்,ரோடு வசதி தேவை

திருப்புத்துார்: திருப்புத்துார் பெரியார் நகரில் மண் சாலை உள்ள பகுதிகளில் மழைநீர் வடிகால் வசதியுடன் ரோடு அமைக்க குடியிருப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்புத்துார் நகரில் விஸ்தரிப்பு பகுதிகளில் பெரியார் நகரும் ஒன்று. மதுரை ரோட்டிற்கும், காந்திநகர் வீதி, மஞ்சுளா தியேட்டர் ரோட்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் உருவான இந்த குடியிருப்பு மிகவும் நெருக்கமான வீடுகள் நிறைந்தது. குறுகலான தெருக்களும் கொண்டது. அதில் பல தெருக்களுக்கு ரோடு வசதி இல்லை. லேசான மழை பெய்தாலே தெருக்களில் நீர் தேங்கி சகதியாகி விடுகிறது. அப்பகுதியினர் நடந்து செல்லக்கூட சிரமப்படுகின்றனர். பெரியார் நகரை முழுமையாக ஆய்வு செய்து தேவையான இடங்களில் ரோடு போடவும், வடிகால் வசதி ஏற்படுத்தி மதுரை ரோட்டுடன் இணைக்க அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை