சிவகங்கை, : சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பில் விமரிசையாக நடைபெற்றது.பிள்ளைவயல் காளியம்மன் கோயில் 70 ம் ஆண்டு பூச்சொரிதல் விழா, ஜூலை 5 ம் தேதி காப்பு கட்டு மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் செய்தனர். எட்டாம் நாளான நேற்று காலை அம்மனுக்கு பால் அபிேஷகம், நவ திரவிய அபிேஷகங்கள் செய்தனர். சந்தனக்காப்பு அலங்காரத்தில் காளியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நகரின் பல்வேறு பகுதியில் இருந்து பெண்கள் பூத்தட்டுக்களை ஏந்தி வந்து, அம்மனுக்கு பூச்சொரிந்து நேர்த்தி செலுத்தினர். சிவகங்கை நகரே நேற்று முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. நேற்று இரவு வரை பக்தர்கள் அம்மனுக்கு பூச்சொரிந்து வழிபாடு நடத்தினர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கினர். விழாவில் பங்கேற்றவர்கள்
ஆரியபவன் ஓட்டல் கருப்பையா, ரகுபாஸ்கர், எஸ்.எம்., பில்டர்ஸ் சுந்தரமாணிக்கம், மகாலட்சுமி இன்ஸ்ட்டியூட் ஸ்ரீனிவாசன், மலைராம் ஓட்டல் பாண்டிவேல், அன்னபூரணி ஓட்டல் லட்சுமணன், கிராம உதவியாளர் அழகர்சாமி - ராஜேஸ்வரி குடும்பத்தினர், ரவிக்குமார் எக்ஸ்ரே இளங்கோவன், ஏஆர்., அன்ட் சன்ஸ் சந்திரன், ஏ.சி.எஸ்., மாடர்ன் ரைஸ்மில் சண்முகநாதன், வழக்கறிஞர்கள் ராம்பிரபாகர், அசோக் மேத்தா, அருட்பெருஞ்ஜோதி சத்திய தர்மசாலை பாலசுப்பிரமணியன், செந்தில்குமார், ஆப்டெக் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் நித்யா கண்ணப்பன் பங்கேற்றனர்.