உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விவசாயிகளுக்கு பயிற்சி

விவசாயிகளுக்கு பயிற்சி

காரைக்குடி : சாக்கோட்டை வட்டார வேளாண் துறை சார்பில் அரியக்குடி ஊராட்சியில், விவசாயிகளுக்கு அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் சமச்சீர் உரப் பயன்பாடு மற்றும் ரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைத்தல் சார்ந்த பயிற்சி நடந்தது. ஊராட்சி தலைவர் சுப்பையா தலைமையேற்றார். உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் சண்முக ஜெயந்தி பேசினார். சாக்கோட்டை வேளாண் உதவி இயக்குனர் அழகுராஜா, செட்டிநாடு வேளாண் கல்லுாரி பேராசிரியர் ஜெயராமச்சந்திரன், சிவகங்கை உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்க திட்ட ஆலோசகர் கண்ணன், சிவகங்கை மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் பிரியா பொன்காயத்ரி பேசினர்.பயிற்சி ஏற்பாடுகளை திட்ட பொறுப்பு அலுவலர் காஜா மைதீன் உதவி வேளாண்மை அலுவலர் கந்தசாமி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை