உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குடிநீர் குழாய் அருகே தேங்கியுள்ள கழிவு நீர்

குடிநீர் குழாய் அருகே தேங்கியுள்ள கழிவு நீர்

சிவகங்கை: சிவகங்கை 5 வார்டு கோகலேஹால் 3வது குறுக்குத் தெருவில் குடிநீர் குழாய் அருகே 10 நாட்களுக்கும் மேலாக பாதாள சாக்கடை கழிவு நீர் தேங்கி இருக்கிறது.இந்த தெருவில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தத் தெரு, அருகில் உள்ளவர்கள் இங்கு உள்ள டேங்க் தண்ணீரை தான் தங்களது வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.இந்த டேங்க் அருகில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறி டேங்கை சுற்றிலும் தேங்கி இருக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.அந்த பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் கூறுகையில், பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.நகராட்சியில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்வதற்கும், கழிவுநீரை அப்புறப்படுத்துவதற்கும் வாகனம் இல்லை என்று கூறுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் எங்கள் பகுதியில் தேங்கியிருக்கும் கழிவு நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி