உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி துரிதமாக நடக்குமா

காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி துரிதமாக நடக்குமா

காரைக்குடி, : காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்டில், நடந்து வரும் புதிய கட்டிட கட்டுமானப் பணிகளை விரைந்து நடத்த வேண்டுமென பயணிகளும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.காரைக்குடி நகராட்சி ஒருங்கிணைந்த அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பழைய பஸ் ஸ்டாண்ட் 1987 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கிருந்து சென்னை, பெங்களூர், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பஸ்கள் செல்கிறது. மேலும் புதுவயல், கல்லல், தேவகோட்டை உள்ளிட்ட சுற்று பகுதிகளுக்கு 30க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் செல்கின்றன. தவிர புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை உள்ளிட்டபல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் பழைய பஸ் ஸ்டாண்ட் வந்து செல்கின்றன. தினமும் அதிக பயணிகள் வந்து செல்லும் பழைய பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் இல்லாததோடு கட்டிடம் முற்றிலுமாக சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. அதனைத் தொடர்ந்து, புதிய கட்டிடப் பணிக்கு என ரூ.3.95 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் கடந்த டிச., மாதம் தொடங்கியது.மாநகராட்சி அந்தஸ்து பெற்றுள்ள காரைக்குடி, பழைய பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்தி பிற மாவட்டங்களில் உள்ளது போல் பெரிய பஸ் ஸ்டாண்ட் கட்ட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், கட்டுமான பணியால் பயணிகள் நிற்பதற்கு போதிய இடவசதி இல்லாததால், மழை மற்றும் வெயிலில் நின்றபடி பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். பணியை துரிதமாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
ஆக 12, 2024 09:47

காரைக்குடி பழைய பேருந்துநிலையம் சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவு உடையது. இதில் சுமார் அறுநூறு பேருந்துகள் வந்து செல்ல முடியும். பஸ்களை ஆர்ச் வடிவில் அமைத்தால் நான்கு அடுக்குகள் வரலாம் கடைசி பெயில் ஆம்னி பஸ்கள் நிறுத்தலாம் அடுத்த பையில் நகரப்பேருந்துகள் நிறுத்தலாம். முதல் பெயில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை பேருந்துகள் வந்து பயணியரை ஏ ற்றி செல்லலாம்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை