உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பனங்காடியில் 2500 ஆண்டு பழமையான இரும்பு உருக்காலை 

பனங்காடியில் 2500 ஆண்டு பழமையான இரும்பு உருக்காலை 

சிவகங்கை, : சிவகங்கை அருகே பனங்காடியில் பெருங்கற்கால இரும்பு உருக்காலை, முதுமக்கள் தாழியை தொல்லியல் ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். தொல்லியல் ஆர்வலர் மீனாட்சி சுந்தரம், அழகப்பா பல்கலை ஆய்வு மாணவி கனகா கூறியதாவது, பனங்காடி அருகே ரங்கம்மாள் கோயில் அருகே காட்டுப்பகுதியில் பழங்கால கற்கள் இருப்பதை கண்டறிந்து, ஆய்வு செய்தோம்.இப்பகுதியில் பெருங்கற்கால இரும்பு உருக்காலை அதன் அருகே முதுமக்கள் தாழிகள் இருப்பதை கண்டறிந்தோம். ஏராளமான கருப்பு சிவப்பு பானை ஓடுகள் சிதைந்த நிலையில் கிடந்தன.இரும்பு உருக்காலை 4 செ.மீ., சுற்றளவில் உடைந்த நிலையில் கிடந்தன. முற்காலத்தில் இங்கு வாழ்ந்த மக்கள் இரும்பு பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தியுள்ளனர்.2,500 ஆண்டுக்கு மேற்பட்ட இரும்பு காலத்தில்வாழ்ந்தவர்கள் வந்திருக்க கூடும். அதிக செம்புரான் கற்கள் இருப்பதே, இரும்பு உருக்காலை செயல்பட காரணம், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை