உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வண்ணாரிருப்பு கிராமத்தில் தனி போலீஸ் செக் போஸ்ட் தேவை

வண்ணாரிருப்பு கிராமத்தில் தனி போலீஸ் செக் போஸ்ட் தேவை

சிங்கம்புணரி, எஸ்.புதுார் ஒன்றியங்களை இணைக்கும் வகையில் ஒடுவன்பட்டியில் இருந்து மேலவண்ணாரிருப்பு வழியாக 3 கி.மீ., துார மலைப்பாதை செல்கிறது.இப்பாதை வழியாக தினமும் ஏராளமானோர் டூவீலர்களிலும், நடந்தும் சென்று வருகின்றனர். இயற்கையின் அழகை ரசிக்க வெளியூர்களில் இருந்து தினமும் ஏராளமானோர் இம்மலைப்பாதைக்கு வந்து செல்கின்றனர். அதில் சில நேரங்களில் சிலர் மது பாட்டில்களுடன் வந்து ஆங்காங்கே அமர்ந்து அருந்துவதும், செல்பி எடுப்பதுமாக இருக்கின்றனர்.தனியாக டூவீலரில் சொல்பவர்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால் பெண்கள் அச்சாலை வழியாக தனியாக செல்ல அச்சப்படுகின்றனர்.அடிவாரத்தில் சொந்த ஊர்காரர்கள் வரும்வரை காத்திருந்து அவர்களோடு செல்ல வேண்டியுள்ளது.ஏற்கனவே மேல வண்ணாரிருப்பு கிராமத்தில் தனி போலீஸ் செக் போஸ்ட் அமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்த நிலையில் இதுவரை அதுபற்றி மாவட்ட போலீஸ் நிர்வாகம் எந்த முடிவும் எடுக்கவில்லை.இந்நிலையில் வனத்துறை மற்றும் போலீசார் இணைந்து மலைப்பாதையின் உச்சியில் பொதுமக்கள் இளைப்பாறி செல்லும் இடத்தில் செக் போஸ்ட் அமைத்து, கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை