உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துார் - காரைக்குடி ரோட்டில் வளைவால் தொடரும் விபத்துக்கள்

திருப்புத்துார் - காரைக்குடி ரோட்டில் வளைவால் தொடரும் விபத்துக்கள்

திருப்புத்துார்: திருப்புத்துாரில் சாம்பான் ஊருணியில் பாலம் கட்டி காரைக்குடி ரோட்டை நேராக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.திருப்புத்துாரிலிருந்து காரைக்குடி செல்லும் ரோடு நகர் எல்லைக்குள் சாம்பான் ஊருணியை சுற்றி செல்கிறது. இப்பகுதியில் சீதளி வடகரை ரோடு, அகிழ்மனைத் தெருக்கள் சந்திக்கின்றன. இப்பகுதியில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி அவ்வப்போது விபத்துக்கள் நடக்கின்றன. ஊருணியில் பாலம் அமைத்து காரைக்குடி ரோட்டை அப்பகுதியில் நேராக்க நீண்ட காலமாக கோரிக்கை உள்ளது. 1989ல் ரூ.50 ஆயிரத்திற்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு நிறைவேற்றப்படவில்லை. பின்னர் மீண்டும் நெடுஞ்சாலைத்துறையினர் மதிப்பீடு தயாரித்தும் பல காரணங்களால் நிறைவேற்றப்படவில்லை.தற்போது ஊருணி பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லை. மழை நீர் சேகரிக்கும் குளமாக உள்ளது. இதனால் ஊருணியில் நீர் சேகரிப்பு பாதிக்காமல் தூண்கள் அமைத்து பாலம் அமைக்க பொதுமக்கள் கோரியுள்ளனர். அதிகாரிகளிடம் விசாரிக்கையில், 'கொட்டாம்பட்டி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை தற்போது திருப்புத்துாரில் சீதளி வடகரையில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.மீண்டும் இந்த ரோடு அங்கிருந்து காரைக்குடி ரோட்டில் உள்ள புறவழிச்சாலையுடன் இணைக்கப்பட உள்ளது. இதற்கு வசதியாக இந்த ரோடு தேசியநெடுஞ்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதில் 3 பாலங்கள், வடிகால் வசதியுடன் ரோடு விரிவாக்கப்பட உள்ளது. அதில் ஒரு பாலம் சாம்பான் ஊருணியில் கட்டப்படுகிறது. தற்போது டெண்டர் இறுதி செய்ய வேண்டிய அளவில் உள்ளது' என்றனர்.இதனால் இந்த ஆண்டிற்குள் ஊருணியில் பாலம் அமைக்கப்பட்டு காரைக்குடி ரோடு நேர்வழியாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை