உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் விற்பனைக்கு வந்த மூங்கில் ஏணி

திருப்புவனத்தில் விற்பனைக்கு வந்த மூங்கில் ஏணி

திருப்புவனம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மூங்கில் ஏணிகள் திருப்புவனத்தில் விற்பனை செய்யப்பட்டன.தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் வீடுகளை சுத்தம் செய்து புது வர்ணம் பூசி வீடுகளை புதியதாக மாற்றுவர். வீடுகளில் சுண்ணாம்பு, பெயின்ட் அடிக்க ஏணிகள் பயன்படுத்தப்படும், இதற்காக திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் மூங்கில் மர ஏணிகள் செய்து திருப்புவனம் பகுதிகளில் கடந்த இரு நாட்களாக விற்பனை செய்து வருகின்றனர். எட்டு அடி முதல் 20 அடி ஏணி வரை விற்பனை செய்கின்றனர்.தயாரிப்பாளர் பிரசாந்த் கூறுகையில்: தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மூங்கில் மரங்கள் அதிகம், தைப்பொங்கல் திருநாளுக்கு முன்னதாகவே மூங்கில் மரங்களை வெட்டி காய வைத்து ஏணிகள் தயாரிப்போம். எட்டு அடி முதல் 20 அடி உயர ஏணி வரை விற்பனை செய்கிறோம், ஆயிரம் ரூபாய் முதல் மூவாயிரம் ரூபாய் வரை ஏணிக்கு விலை வைத்து விற்பனை செய்கிறோம்,என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை