உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பறவைகள் கணக்கெடுப்பு: புதிய பறவைகள் வருகை

பறவைகள் கணக்கெடுப்பு: புதிய பறவைகள் வருகை

திருப்புத்துார் : பறவைகள் கணக்கெடுப்பை வனத்துறையினர் தன்னார்வலர்களுடன் மாவட்ட அளவில் நடத்தியதில் சிவகங்கை மாவட்டத்திற்கு வலசை போதல் ஆக புதிய பறவைகள் வந்தது தெரியவந்துள்ளது.சிவகங்கை மாவட்டத்தில்25 ஈர நிலப்பகுதிகளான கண்மாய் களிலும், பறவைகள் வலசை வரும் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் பகுதி கண்மாய்களிலும் பறவைகள் கணக்கெடுப்பை வனத்துறையினர் மாவட்ட வன அலுவலர் பிரபா தலைமையில் நடத்தினர். தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்களுடன் முதன்முறையாக வன உயிரினங்களை படமெடுக்கும் 8 புகைப்பட கலைஞர்களும் கணக்கெடுப்பில் பங்கேற்றனர்.முதற்கட்டமாக நீர்பறவைகள் கணக்கெடுப்பை இவர்கள் மேற்கொண்டனர்.நிலப்பறவைகள் கணக்கெடுப்பு வழக்கமாக மார்ச்சில் நடைபெறும். இந்த கணக்கெடுப்பின் போது, பேராசிரியர் கோபிநாத் வேட்டங்குடி சரணாலய கண்மாய்களிலும், வனச்சரக அலுவலர் கார்த்திகேயன் நாலுகோட்டை கண்மாய் பகுதிகளில் நடத்திய கணக்கெடுப்பிலும் புதிதாக வந்துள்ள பறவைகள் கண்டறியப்பட்டன.அதில் வாத்து இனத்தைச் சேர்ந்த ஈஸ்டர்ன் ஸ்வாலர் என்ற தட்டைவாயன், நீண்ட கால்களை கொண்ட கரைப்பறவையான பிளாக் விங்க்டு ஸ்டில்ட் என்ற நெடுங்கால் உள்ளான், கொக்கு இனத்தைச் சேர்ந்த யுரேசியன் ஸ்பூபில் எனப்படும் யுரேசியாவைச் சேர்ந்த கரண்டி வாயன், நீர்வாழ் பறவையான வாத்து இனத்தைச் சேர்ந்த நோப் பில்ட் டக் எனப்படும் செண்டு வாத்து. ஆகிய பறவைகள் புதிதாக வந்துள்ளன.இது போன்று பல புதிய பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன. கணக்கெடுப்பில் புதிய பறவைகள் வருகை விபரம் மற்றும் பறவைகளின் எண்ணிக்கை குறித்து வனத்துறையினர் அனைத்து கணக்கெடுப்பு மையங்களிலிருந்தும் சேகரித்து பதிவு செய்து வருகின்றனர். விரைவில் அதற்கான விபரங்கள் அறிவிக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை