உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடியில் காங்., ஆலோசனை கூட்டம்; வெடிக்கும் கோஷ்டி பூசல்

காரைக்குடியில் காங்., ஆலோசனை கூட்டம்; வெடிக்கும் கோஷ்டி பூசல்

காரைக்குடி: காரைக்குடியில், மாவட்ட காங்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், சிவகங்கை தொகுதியில் மீண்டும் போட்டியிட கார்த்திக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். கூட்டத்திற்கு காங்., மாவட்ட தலைவர் சஞ்சய்காந்தி தலைமை வகித்தார். லோக்சபா தொகுதி பொறுப்பாளர் அருள் பெத்தையா, மாங்குடி எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். ராகுலை பிரதமராக அமர்த்த வேண்டும். சிவகங்கையில் காங்., சார்பில் கார்த்தி எம்.பி.,க்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.அதே நேரம் போட்டி காங்., கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி., சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ராமசாமி, சுந்தரம் ஆகியோர் சிவகங்கையில் கார்த்திக்கு மீண்டும் சீட் வழங்க கூடாது என போர்க்கொடி துாக்கியுள்ளனர். இதனால், சிவகங்கை தொகுதியில் காங்., கட்சியினருக்குள் கோஷ்டி பூசல் தலைவிரித்தாடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை