உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் ரோடு தடுப்புகள் சேதம்

காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் ரோடு தடுப்புகள் சேதம்

காரைக்குடி : காரைக்குடி புது பஸ் ஸ்டாண்ட் முதல் ரயில்வே ரோடு செல்லும் சாலையில் நடுவே உள்ள தடுப்புகள் சேதமாகி கிடப்பதால் வாகன ஓட்டிகளுக்கு அச்சம் நிலவுகிறது.காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் மற்றும் அழகப்பா பல்கலை செல்லும் முக்கிய சாலையாக 100 அடி ரோடு சாலை உள்ளது. சாலையில் தினமும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாகனங்களில் சென்று வருகின்றனர். சாலையில் நடுவில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்புகள் பல இடங்களிலும் சேதமடைந்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் சேதம் அடைந்த தடுப்புகளால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. தற்போது சேதுமடைந்து விழுந்து கிடக்கும் தடுப்புகளை முறையாக வைக்காததால் வாகன ஓட்டிகளுக்கு அபாயம் நிலவுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை