உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நுால்கள் உலக அறிவு தரும் முன்னாள் அமைச்சர் பேச்சு

நுால்கள் உலக அறிவு தரும் முன்னாள் அமைச்சர் பேச்சு

திருப்புத்துர், : திருப்புத்துார் என்.எம்., அரசு மகளிர் பள்ளியில் எம்.பி., தொகுதியில் கட்டப்பட்ட நுாலகத்தை முன்னாள் அமைச்சர் சிதம்பரம் திறந்து வைத்தார். கார்த்தி எம்.பி., முன்னிலை வகித்தார். சிதம்பரம் பேசியதாவது: நுாலகத்தில் உள்ள நுால்களையும் மாணவர்கள் படிக்க வேண்டும். பாடபுத்தகம் கல்வி தரும், நுால்கள் வளர்ந்த மற்றும் உலக அறிவை தரும். தினமும் நுாலில் 10 முதல் 15 பக்கங்கள் வரை படிக்கவேண்டும். நுால்களை சரளமாக படித்தால் தான் சரளமாக பேச வரும். அப்போது தான் சிந்திக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ