உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பட்டமளிப்பு விழா  ஜன.29ல்கவர்னர் பங்கேற்பு ஜன.29ல் கவர்னர் பங்கேற்பு 

பட்டமளிப்பு விழா  ஜன.29ல்கவர்னர் பங்கேற்பு ஜன.29ல் கவர்னர் பங்கேற்பு 

சிவகங்கை: ஜன.,29 அன்று காலை காரைக்குடி அழகப்பா பல்கலையில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. துணைவேந்தர் ஜி.ரவி வரவேற்புரை ஆற்றுகிறார். உயர்கல்வி அமைச்சர்ராஜகண்ணப்பன் முன்னிலை வகிக்கிறார். உயர்கல்வித்துறை செயலர், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்கின்றனர். விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்., ரவி முனைவர் பட்டம் முடித்த 150 பேர் உட்பட 350 பேருக்கு நேரடியாக பட்டம் மற்றும் சான்றுகளை வழங்குகிறார். பல்கலை பதிவாளர் ஏ.செந்தில்ராஜன் நன்றி கூறுகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை பல்கலை நிர்வாகத்தினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை