உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குட்கா பதுக்கியவர் கைது

குட்கா பதுக்கியவர் கைது

சிங்கம்புணரி : மு.சூரக்குடி ஊராட்சி சூடணிபட்டியைச் சேர்ந்தவர் சின்னையா 35, மாற்றுத்திறனாளி. கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.இவரது கடையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலை அடுத்து சதுர்வேதமங்கலம் போலீசார் சோதனை நடத்தினர்.கடையில் ரூ. 1.25 லட்சம் மதிப்புள்ள 195 கிலோ எடையுள்ள குட்கா, புகையிலைப் பொருட்களை 20 மூடைகளில் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் சின்னையாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை