உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  அமைச்சர் நேரு விவகாரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை கார்த்தி எம்.பி., பேட்டி

 அமைச்சர் நேரு விவகாரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை கார்த்தி எம்.பி., பேட்டி

காரைக்குடி: அமைச்சர் நேரு விவகாரத்தில் சட்டத்தில் இடம் இருந்தால், அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் இதுவரை அமலாக்கத்துறை சட்டப்படி நடந்தது இல்லை என கார்த்தி எம்.பி., தெரிவித்தார். காரைக்குடியில் அவர் கூறியதாவது: பீஹாரில் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கிய போது கருத்து தெரிவிக்காத பழனிசாமி, தமிழகத்தில் நடைமுறையில் உள்ள பெண்களுக்கு ரூ. ஆயிரம் வழங்கும் திட்டத்தை குற்றம் சாட்டுவது ஏற்புடையதாக இல்லை. 10 ஆண்டு ஆட்சி செய்த போது பழனிசாமி வெள்ளை அறிக்கை கொடுத்தாரா. திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் எந்த பிரச்னையும் இல்லை. தமிழகத்தில் உள்ள கோயில்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டிய இடத்தில் காலங்காலமாக ஏற்றப்பட்டு வருகிறது. வழக்கமான சம்பிரதாயங்களும் பின்பற்றப்பட்டு வருகிறது. வட இந்தியாவில் இருக்கும் பா.ஜ.,விற்கு தமிழகத்தின் கலாசாரம், மத பழக்க வழக்கங்கள் புரியவில்லை. அமைச்சர் நேரு விவகாரத்தில் உரிய ஆதாரம் இருந்தால், சட்டத்தில் இடம் இருந்தால் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், இதுவரை அமலாக்கத்துறை சட்டப்படி நடந்ததாக நான் கூறியதே கிடையாது. அரசாங்கத்தின் கைப்பாவையாகவே பல இடங்களில் நடந்து கொள்கின்றனர். மற்ற கட்சியினர் அடிக்கடி வெளியில் வருவார்கள். விஜய் அவ்வப்போது வெளியில் வருகிறார். தமிழகத்தில் அதிக முதலீடுகள் வந்துள்ளன. அதை வைத்து வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தின் பொருளாதாரம் தான் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம். தமிழகத்தில் தி.மு.க., தலைமையிலான இண்டி கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை