உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  கீழடி அருங்காட்சியக நேரம் அதிகரிக்க வலியுறுத்தல்

 கீழடி அருங்காட்சியக நேரம் அதிகரிக்க வலியுறுத்தல்

கீழடி: கீழடி அருங்காட்சியகத்தில் பார்வையாளர் நேரத்தை இரவு 9:00 மணி வரை நீட்டிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். நதிக்கரை நாகரீகம் குறித்த மத்திய தொல்லியல் துறையின் அகழாய்வு மூலம் இரண்டாயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன் இருந்த மக்களின் வாழ்விடம், விவசாயம், தொழில், வணிகம் உள்ளிட்டவற்றிற்கான சான்றுகள் கண்டறியப்பட்டன. கீழடியில் மத்திய, மாநில தொல்லியல் துறை அகழாய்வு மூலம் கிடைத்த பொருட்களை கொண்டு அருங்காட்சியகம் கட்டப்பட்டு 2023 மார்ச் முதல் தினசரி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு ரசித்து வருகின்றனர். அருங்காட்சியகம் தினசரி காலை 10:00 மணி முதல் மாலை ஆறு மணி வரையிலும், சனி, ஞாயிறுகளில் ஏழு மணி வரையிலும் திறந்திருக்கும். செவ்வாய்கிழமை விடுமுறை. தற்போது சபரிமலை மற்றும் பழநி முருகன் கோயில்களுக்கு ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து மாலை அணிந்து செல்வார்கள், மாலை அணிந்த பக்தர்கள் ராமேஸ்வரம் கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்வார்கள், இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருப்புவனம், கீழடி வழியாக தினசரி ஆயிரக்கணக்கானவர்கள் சென்று வருகின்றனர். செல்லும் வழியில் பலரும் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டு செல்வது வழக்கம். கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை இரவிலும் கண்டு ரசிக்கும் வண்ணம் அதிநவீன விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அருங்காட்சியகம் மாலை ஆறு மணிக்கே மூடப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கீழடி அருங்காட்சியகத்தின் நேரத்தை அதிகரிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகள் பலரும் பகலில் அருங்காட்சியகத்தை பார்வையிட்டுள்ளனர். இரவில் ஜொலிக்கும் விளக்குகளின் மத்தியில் இரண்டாயிரத்து 600 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் பயன்படுத்திய பொருட்களை காண ஆர்வத்துடன் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை