உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வேகத்தடையில் விழுந்து பலி

வேகத்தடையில் விழுந்து பலி

திருப்புவனம் : திருப்புவனத்தில் சென்னை ஏ.டி.ஜி.பி., அலுவலக பெண் ஊழியர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.மதுரை ஆலங்குளத்தைச் சேர்ந்த துரை மனைவி பத்மா 56, சென்னை ஏ.டி.ஜி.பி., அலுவலகத்தில் டைப்பிஸ்ட்டாக பணிபுரிகிறார். உடல் நிலை சரியில்லாததால் மருத்துவ விடுப்பில் சொந்த ஊரான மதுரைக்கு வந்த அவர் நேற்று காலை மகன் முத்துராமனுடன் டூவீலரில் மடப்புரம் கோயிலுக்கு வந்துள்ளார். திருப்புவனம் பைபாஸ் சர்வீஸ் ரோட்டில் உள்ள வேகத்தடையில் வாகனம் ஏறி இறங்கும் போது தடுமாறி கீழே விழுந்தவர் தலையில் அடிபட்டு உயிரிழந்தார். திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ