| ADDED : ஜன 01, 2024 05:34 AM
ஜன.6ல் ஆலோசனைதிருப்புத்தூர்: திருப்புத்தூர் கோட்டைக்கருப்பண்ண சுவாமி கோயில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு ஜன.6 ல் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. திருப்புத்தூர் நகரின் கிழக்கு திசை காவல் தெய்வமாக உள்ளது கோட்டைக் கருப்பண்ண சுவாமி கோயில். பாண்டிய மன்னர்கள் ஆட்சியில் திருப்புத்தூர் நகரின் கோட்டையின் பிரதான வாசல் அருகே இக்கோயில் இருந்துள்ளது.அதன் அடையாளமாக இன்றும் பல நூற்றாண்டு பழமையான கோட்டைச்சுவர் ராஜகோபுரத்துடன் உள்ளது. தற்போது இக்கோயிலுக்கு திருப்பணிகள் துவக்கப்பட்டுள்ளது. அறங்காவலர் எஸ்.வைரவன் தலைமையில் திருப்பணி துவங்கியுள்ளது.அனைத்து விமானம், கோபுரமும் புதிதாக சுதை சிற்ப வேலைப்பாடுகள், துத்தநாக கம்பிகளுடன் புனரமைக்கப்படுகிறது.சேமக்குதிரைகள் பல வண்ணங்களில் புதுப்பிக்கப்படுகிறது. கல்துாண்கள், கூரைகள் பெயிண்ட் நீக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்படுகிறது. அம்பாள், தொண்டைமான் சன்னதிகளுக்கு புதிய விமானம் அமைக்கப்படுகிறது.கோயிலுக்கு அருகாமையில் 53 சென்ட் இடம் மீட்கப்பட்டு தற்போது சீரமைக்கப்படுகிறது. மேலும் அதற்கான சுற்றுச்சுவர், கழிப்பறை, குடிநீர் வசதிகள் செய்து வருகின்றனர். கும்பாபிேஷகத்திற்கான ஆலோசனை கூட்டம் ஜன., 6 ல் தேவகோட்டையார் விடுதியில் காலை 10:00 மணிக்கு நடக்கிறது.