உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நாகம்மாள் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

நாகம்மாள் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

மானாமதுரை, - மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் உள்ள நம்பி நாகம்மாள் கோவிலில் திருப்பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன.கும்பாபிஷேக விழாவிற்காக நேற்று மாலை கணபதி ஹோமத்துடன் முதலாம் கால யாகசாலை பூஜைகள் துவங்கின.இதனை தொடர்ந்து இன்று காலை 7:00 மணி முதல் 2ம் கால யாகசாலை பூஜைகள், மாலை 5:30 மணிக்கு 3ம் கால யாகசாலை பூஜை தொடர்ந்து நடைபெற்று, நாளை காலை 4ம் கால யாகசாலை பூஜைக்கு பின் காலை 10:35 மணி முதல் 11:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ரவிச்சந்திரன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை