உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  சிறுமி பாலியல் பலாத்காரம்; கூலி தொழிலாளி கைது

 சிறுமி பாலியல் பலாத்காரம்; கூலி தொழிலாளி கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளி கார்த்திக்கை 36, மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். இளையான்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் நேற்று முன்தினம் 11 வயது சிறுமியின் தாயும், தந்தையும் வயல் வேலைக்கு சென்றதை பயன்படுத்தி வீட்டில் தனியாக இருந்தவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் வீட்டிற்குள் அச்சிறுமி மயங்கி கிடந்தார். அவரிடம் பெற்றோர் விசாரித்தபோது கார்த்திக் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து கார்த்திக்கை மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து விசாரித்து வரு கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை