உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மயானம் இருந்தும் செயல்படாததால் வருமானம் இழப்பு : அதிகாரிகள் மெத்தனத்தால் ஏழு ஆண்டாக அவதி

மயானம் இருந்தும் செயல்படாததால் வருமானம் இழப்பு : அதிகாரிகள் மெத்தனத்தால் ஏழு ஆண்டாக அவதி

தேவகோட்டையில் பல ஆண்டுகளாக மணிமுத்தாறு கரையோரம் நகராட்சியினர் தகர கொட்டகையால் மயானம் அமைத்து இருந்தனர் . மயானத்தை புதுப்பிக்க நகராட்சி ஏற்பாடு செய்த போது ஆற்றின் கரையில் மயானம் கட்டக்கூடாது என்ற உத்தரவால் மயானம் அமைக்கப்படவில்லை.இந்நிலையில் மயானம் செயல்பட்ட இடம் கண்ணங்குடி ஒன்றியம் சித்தானுார் ஊராட்சியைச் சேர்ந்தது என தெரியவந்தது. ரோட்டரி சங்கத்தினர் அப்போது இருந்த எம்.எல்.ஏ. ராமசாமி மூலம் சித்தானூர் ஊராட்சி நிர்வாகிகளிடம் பேசி அனுமதி பெற்று சமத்துவ மயானம் என்ற பெயரில் ரூ . 4.75 லட்சம் செலவழித்து புதுப்பித்தனர். கட்டணம் வசூல் செய்வதில்லை என்றும் அப்போது முடிவு செய்யப்பட்டது. நகர் மக்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த இடத்தை மயானமாக பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில் தேவகோட்டை நகருக்கு ஒரு மயானம் வேண்டும் என கோரிக்கை எழுந்தது. தேவகோட்டை நகர் ராம்நகர் எல்லையில் இடம் தொடர்பாக பிரச்னை உருவாகி கோர்ட் வரை சென்று மயானம் கட்டலாம் என நகராட்சிக்கு சாதகமான தீர்ப்பு வந்தது. இதனைத் தொடர்ந்து நகராட்சி சார்பில் தமிழக அரசின் மூலதன வருமானம் என்ற சிறப்பு திட்டத்தில் 2017- -2018ம் ஆண்டில் ரூ 75 லட்சத்தில் நவீன தகன மையம் கட்டப்பட்டது. சுற்றுச்சுவர், தண்ணீர் வசதி என ரூபாய் ஒரு கோடி வரை செலவானது.2020 ல் அன்றைய அ.தி.மு.க. அமைச்சர் வேலுமணி தேவகோட்டைக்கு வந்த போது மயானம் செயல்படாமல் இருப்பது குறித்து அவரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது அதிகாரிகளிடம் விசாரித்து அவர் அளித்த பதில், மயானங்களுக்கு திறப்பு விழா நடத்துவதில்லை. ஒரு வாரத்தில் செயலாக்கத்திற்கு கொண்டு வரலாம் என அதிகாரிகள் கூறுகிறார்கள்.பதினைந்து நாளில் செயல்படும்' என அறிவித்தார். நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டது. ஆனாலும் செயல்பாட்டுக்கு வரவில்லை. டெண்டர் விடப்பட்டு மகளிர் தொண்டு நிறுவனம் குத்தகை எடுத்துள்ளனர். ரசீது கூட அடித்து விட்டனர். விறகுகளை எரிய விட்டு சோதனை செய்து விட்டனர். ஆனால் நகராட்சி அதிகாரிகள் இதனை செயல்படுத்துவதில் அலட்சியம் காட்டுகிறார்கள்.

கட்டணம் வசூல்

இதற்கிடையில் வழக்கமாக எரியூட்டப்படும் மயானத்தில் சில மாதங்களாக இறுதி சடங்குகள் செய்ய சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் ரூ 500 வரை கட்டணமாக வசூல் செய்கிறார்கள். பல ஆண்டுகளாக கட்டணம் இல்லாத நிலையில் தற்போது எந்த வசதியும் செய்யாத நிலையில் கட்டணம் வசூலிப்பது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.அனைத்து வசதியும் இருந்தும் நகராட்சி எரிவாயு தகன மையம் ஏழு ஆண்டுகளாக செயல்படாமல் மூடிகிடப்பதால் நகராட்சிக்கு வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. மூலதன திட்டத்தில் கட்டியும் வருமானம் பற்றி நகராட்சி தணிக்கை அலுவலர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது.

கலெக்டர் கவனிப்பாரா

உங்களை தேடி திட்டத்தில் கலெக்டர் அந்த பகுதியில் தான் முகாமிட்டு உள்ளார். ரூ ஒன்றரை கோடியில் கட்டப்பட்ட எரிவாயு மயானத்தை பார்வையிட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை