| ADDED : பிப் 04, 2024 04:48 AM
மானாமதுரை : மானாமதுரையிலிருந்து மதுரைக்கு புறநகர் பஸ் போக்குவரத்தை எம்.எல்.ஏ.,தமிழரசி துவக்கி வைத்தார்.மானாமதுரை வழியாக மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டிலிருந்தும் பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், கமுதி, முதுகுளத்தூர் போன்ற ஊர்களில் இருந்தும் மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டிற்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.இந்த பஸ்களில் மானாமதுரை பயணிகளை ஏற்ற நீண்ட காலமாக மறுத்து வருவதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வந்தனர்.மானாமதுரையிலிருந்து மதுரைக்கு தனியாக புறநகர் பஸ் இயக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ., தமிழரசி நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து நேற்று காலை முதல் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிலிருந்து மதுரைக்கு புதிய புறநகர் பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ் காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் இயக்கப்பட உள்ளது.நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவர் பாலசுந்தரம்,ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் துரைராஜாமணி,நகர பொருளாளர் மயில்வாகணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.