உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை - தாயமங்கலம் ரோடு சீரமைப்பு பணி துவக்கம்

மானாமதுரை - தாயமங்கலம் ரோடு சீரமைப்பு பணி துவக்கம்

மானாமதுரை : மானாமதுரையில் இருந்து தாயமங்கலம் செல்லும் ரோட்டை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைக்கும் பணியை துவக்கியுள்ளனர்.இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது.இங்கு பங்குனியில் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி, கரும்பாலை தொட்டில், முடிக்காணிக்கை செலுத்தி ஆடு,கோழிகளை பலியிட்டு தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவர்.இந்நிலையில் வருகிற 28ம் தேதி பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. விழாவிற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் மானாமதுரை வழியாக தாயமங்கலத்திற்கு வருவர்.இந்த ரோட்டை புதுப்பிக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதனை தொடர்ந்து நெடுஞ்சாலை துறை சார்பில் நேற்று மானாமதுரையிலிருந்து தாயமங்கலம் செல்லும் ரோடு சீரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன. பணிகளை மானாமதுரை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் சொக்கலிங்கம்,உதவி பொறியாளர் ராமநாதன் ஆகியோர் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை