உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  இருளில் மருத்துவக்கல்லுாரி ரோடு: நோயாளிகள் அச்சம்

 இருளில் மருத்துவக்கல்லுாரி ரோடு: நோயாளிகள் அச்சம்

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லும் மானாமதுரை ரோட்டில் இருந்து மருத்துவமனை வரை அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்கு இரவில் எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுவதால் சிகிச்சைக்கு செல்லும் பெண்கள் அச்சப்படுகின்றனர். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மானாமதுரை ரோட்டில் இருந்து அரை கிலோமீட்டர் நடந்து செல்லும் துாரத்தில் உள்ளது. இந்த ரோட்டில் இரவு நேரத்தில் விளக்கு எரிவதில்லை. இந்த ரோட்டில் குடியிருப்புகளோ அல்லது கடைகளோ கிடையாது. ரோட்டின் இருபுறமும் முட்செடிகள் அடர்த்தியாக உள்ளது. மருத்துவமனையில் 250 டாக்டர்கள், 600 செவிலியர்கள், 450 பல்நோக்கு பணியாளர்கள் பணிபுரிகின்றனர். 800 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சையில் உள்ளனர். 500 மருத்துவ மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் அனைவரும் இந்த ரோட்டை பயன்படுத்தி தான் நகருக்குள் வரவேண்டும். சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் இந்த ரோட்டை பயன்படுத்தி தான் இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டும். மாவட்ட நிர்வாகம் மருத்துவக் கல்லுாரிக்கு செல்லும் ரோட்டில் உள்ள விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை