உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தாலுகா அலுவலகத்தில் மின்தடை காத்து கிடந்த பொதுமக்கள்

தாலுகா அலுவலகத்தில் மின்தடை காத்து கிடந்த பொதுமக்கள்

திருப்புவனம்: திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் நேற்று காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டதால் அங்குள்ள ஆதார் மையத்தில் பொதுமக்கள் காத்து கிடந்தனர்.திருப்புவனம் தாலுகா அலுவலக வளாகத்தில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. ஆதார் கார்டில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் 20க்கும் மேற்பட்ட பெண்கள் காத்திருந்தனர்.காலை 11:00 மணிக்கு திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கம்ப்யூட்டர் முடங்கியது. இன்வெர்ட்டர்கள், பேட்டரிகள் இல்லாததால் எந்த பணியும் செய்ய முடியவில்லை. ஆதார் கார்டு விண்ணப்பிக்க வந்தவர்கள் வேறு வழியின்றி காத்து கிடந்தனர். ஒரு மணி நேரம் கடந்த பின் மின்சாரம் வந்த பின் பணிகள் தொடங்கின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ