உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மளிகை கடைகளில்தரப் பரிசோதனை

மளிகை கடைகளில்தரப் பரிசோதனை

திருப்புத்துார்: திருப்பத்துார் மளிகை கடைகளில் வாகனப் பரிசோதனைக் கூடம் மூலம் உணவுப் பாதுகாப்புத்துறையினர் தரப் பரிசோதனை நடத்தினர்.திருப்புத்துார் நகரில் நடமாடும் உணவு பகுத்தாய்வு வாகனம் மூலம் உணவு தயாரிக்கப் பயன்படும் பொருட்களின் தரம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த வாகனம் மூலம் பெரிய கடை வீதி, சின்ன கடை வீதி, மதுரை ரோடு பகுதிகளில் மளிகை கடைகளில் தரப்பரிசோதனை நடந்தது. உணவு பாதுகாப்பு அலுவலர் தியாகராஜன், உணவு பகுப்பாய்வு இளநிலை ஆய்வாளர் சிவா அடங்கிய குழுவினர் பரிசோதனை செய்தனர். கடைகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளை உடனுக்குடன் வாகனத்தில் உள்ள பரிசோதனைக் கூடத்தில் பகுத்தாய்வு செய்து தரம் நிர்ணயிக்கப்பட்டது. தரம் குறைவான உணவு பொருட்களை விற்ற கடை உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி