உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிடப்பில் சாலை பணி; மக்கள் அவதி

கிடப்பில் சாலை பணி; மக்கள் அவதி

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணியால் மக்கள் அவதிப்படுகின்றனர். இவ்வொன்றியத்தில் மதுராபுரி ஊராட்சி வேங்கைப்பட்டி மெயின் ரோட்டில் இருந்து நாடார் வேங்கைப்பட்டி வரை சாலை பழுதடைந்து இருந்தது. இதை சீரமைக்க பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லாமல் இருந்தது. இதுகுறித்து தினமலர் இதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக 33 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஜனவரியில் பணி துவங்கியது. ரோடு தோண்டப்பட்டு கற்கள் கொட்டப்பட்ட நிலையில் கடந்த ஒரு மாதமாக பணி கிடப்பில் விடப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சாலைப் பணியை தாமதமின்றி விரைந்து முடிக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி