உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணிக்க விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

மாணிக்க விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

இளையான்குடி : இளையான்குடி அருகே மாணிக்க வாசகர் நகரில் உள்ள மாணிக்க விநாயகர் கோவிலில் நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கி நடைபெற்று வந்தன.நேற்று காலை 3ம் கால யாக பூஜை முடிந்ததை தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோயிலை சுற்றி வலம் வந்து கோபுரத்திற்கு கொண்டு சென்று புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது. விழாவில் இளையான்குடி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை