| ADDED : அக் 08, 2011 11:00 PM
சிவகங்கை : சிவகங்கை நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் காங்.,வேட்பாளர் நாகராஜன் 18, 26, 27 வது வார்டுகளில்பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது: சிவகங்கையில் 130 கோடியில் மருத்துவக்கல்லூரி, மன்னர் துரை சிங்கம் கல்லூரியில் 10 லட்சத்தில் கூடுதல் கட்டடம் உள்ளிட்ட திட்டங்களை மத்திய அமைச்சர் சிதம்பரம் வழங்கியுள்ளார். மருத்துவம், தொழில் நுட்ப படிப்பு, கல்லூரி மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.நகரில் இந்திரா காந்தி தேசிய குடிசை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 90 சதவீதத்துடன் மானியத்துடன் 1 கோடியே 50 லட்சத்தில் புதிய வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர்,வீட்டு வரி குறைத்து வரி சீரமைப்பு செய்யப்படும்.வார்டு மக்களின் குறைகளை களைய குறைதீர் அலுவலகம் திறக்கப்படும். பாதாள சாக்கடை பணியில் உள்ள இடையூறு களைந்து பணிகள் 3 மாதங்களில் முடிக்கப்படும். நகரில் தினமும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.நகர் முழுவதும் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் முழுமையான ரோடு வசதி, அடிப்படை வசதி செய்து தரப்படும். பொதுமக்களின் குறைகள் 7 நாட்களுக்குள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.சிவகங்கை மக்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களில் பணி செய்துள்ளேன்.'' என்றார். பிரச்சாரத்தின் போது முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகரன், நகர் காங்., தலைவர் சண்முகராஜன், சேவாதள பழனிச்சாமி,ஜோசப் ஆசிரியர், கவுன்சிலர் வேட்பாளர்கள் பகவதி, குமார், சரவணக்குமார், லெட்சுமணன் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்.