உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மக்களுக்கு சேவை செய்ய என்றென்றும் காத்திருக்கிறேன் : சுயே., வேட்பாளர் பேட்டி

மக்களுக்கு சேவை செய்ய என்றென்றும் காத்திருக்கிறேன் : சுயே., வேட்பாளர் பேட்டி

காரைக்குடி : கூப்பிட்ட குரலுக்கு மக்களுக்கு ஓடோடி சென்று, என்றென்றும் சேவை செய்ய காத்திருக்கிறேன் என, காரைக்குடி நகராட்சி 8வது வார்டு சுயேச்சை வேட்பாளர் க.ஆறுமுகம் தெரிவித்தார். அவர் கூறியதாவது: நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் அதிக பரப்பளவு கொண்டது 8வது வார்டு. இங்கு 38 சாலைகள் உள்ளன. கடந்த 2001-06ல் இந்த வார்டு கவுன்சிலராக இருந்துள்ளேன். அப்போது, குடிநீர் அபிவிருத்திக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்ட 1.50 கோடி ரூபாய் செலவில் வார்டின் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக பாடுபட்டுளேன். இதே வார்டில் 30 வருடமாக சொந்த வீட்டில் வசித்து வருகிறேன். இதனால் இங்கு வசிக்கும் மக்கள் பிரச்னை குறித்து எனக்கு நன்கு தெரியும். தற்போது, 2வது முறையாக சுயேச்சையாக போட்டியிடுகிறேன். நான் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டால், 'மக்கள் என்னை தேடி வரவேண்டாம்' அவர்களை தேடி நான் சென்று சேவை செய்ய காத்திருக்கிறேன். நான், அவர்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டவனாக இருப்பேன், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை