உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  கீழடி அருங்காட்சியகத்தில் தமிழ் புத்தகம் விற்பனை நிறுத்தம்

 கீழடி அருங்காட்சியகத்தில் தமிழ் புத்தகம் விற்பனை நிறுத்தம்

கீழடி: கீழடி அருங்காட்சியகத்தில் கீழடி குறித்த தமிழ் புத்தகம் விற்பனை நிறுத்தப்பட்டதால், ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கீழடியில் மத்திய, மாநில தொல்லியல் துறை சார்பில் 2015 முதல் அகழாய்வு நடந்து வருகின்றன. இதுவரை பத்து கட்ட அகழாய்வு முடிந்த நிலையில் கீழடியில் கண்டறியப் பட்ட பொருட்களை பொதுமக்கள் காணும் வகையில் அருங்காட்சி யகம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. கீழடி அருங்காட்சி யகத்தில் தொல்லியல் துறை சார்பில் புத்தக விற்பனை நிலையம் திறக்கப்பட்டு கீழடி அகழாய்வு குறித்த தொல்லியல் துறை சார்பில் வெளியிடப்பட்ட புத்தகங்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர தமிழ் இலக்கியங்கள், அகழாய்வு குறித்த புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளன. கடந்த சில வாரமாக தமிழ் புத் தகங்கள் விற்பனை செய்யப்படவே இல்லை. அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், தமிழ் புத் தகங்கள் விற்பனை நிறுத்தப்படவில்லை. புத்தகங்கள் காலியாகி விட்டதால் மீண்டும் அச்சடிக்க கொடுத்துள்ளோம், இன்னமும் வரவில்லை, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை