உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காயங்களுடன் கோயில் மாடுகள்

காயங்களுடன் கோயில் மாடுகள்

சிங்கம்புணரி, - சிங்கம்புணரியில் காயங்களுடன் திரியும் கோயில் மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.இங்குள்ள சேவுகப் பெருமாள் அய்யனார் கோயிலுக்கு பக்தர்கள் மாடுகளை நேர்த்திக் கடனாக விடுவது வழக்கம். இந்த மாடுகள் சுற்று வட்டார காடு, வயல்களில் திரிந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தியது. அம்மாடுகளை கோசாலை மூலம் அடைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.இந்நிலையில் நகரில் திரியும் சில மாடுகள் காயங்களுடன் சுற்றித்திரிகின்றன. இவற்றை பார்க்கும் பக்தர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே காயமடைந்த மாடுகளை மீட்டு உரிய சிகிச்சை அளித்து பராமரிக்க வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ