சிங்கம்புணரியில் தேவர் குருபூஜை
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி, குருபூஜை கொண்டாடப்பட்டது. சீரணி அரங்கம் முன் அவரது படத்திற்கு தேவர் பேரவை உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நேதாஜி நகரில் தேவர் உருவப்படம் முன்பாக பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். தெற்குத்தெரு, முழுவீரன் தெரு, கீழத்தெரு ஆகிய இடங்களிலும் குருபூஜை கொண்டாடப்பட்டது. பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து வந்து வீரையா கோயில் வளாகத்தில் உள்ள தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர். ரத்ததான முகாம் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ., ராம.அருணகிரி, பேருராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத் தலைவர் செந்தில், சத்தியசீலன், தேவர் பேரவை தலைவர் இளம்பரிதி, ஜெயந்தன், பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்றனர். கண்ணமங்கலப்பட்டி, கிருங்காக்கோட்டை, மட்டிக்கரைப்பட்டி, சதுர்வேதமங்கலம், முறையூர் உள்ளிட்ட பகுதியில் தேவர் குருபூஜை விழா கொண்டாடப்பட்டது. சிவகங்கை: சிவகங்கை அரண்மனை பகுதியில் சிவகங்கை சீமை மறவர் நல சங்கம் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு குரு பூஜை விழா கொண்டாடப்பட்டது. நிர்வாகிகள் ராமச்சந்திரன், போஸ், உதயா முத்துராமலிங்க தேவர் படம் முன் மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ., செந்தில்நாதன், நகர் செயலாளர் ராஜா, ஜெ பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர் செல்வமணி, கோபி, பா.ஜ., சார்பில் நகர் தலைவர் உதயா, செயலாளர் பாலா, ஒ.பி.எஸ்., அணி சார்பில் நகர் செயலாளர் சேகர், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சுந்தரபாண்டி, மாணவர் அணி செயலாளர் மாரிமுத்து உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள், அமைப்பினர் மரியாதை செய்தனர். மானாமதுரை: மானாமதுரையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ஏ.விளாக்குளம் கிராமத்தினர் கடந்த வாரம் காப்பு கட்டி விரதமிருந்தனர். ஏ.விளாக்குளம் கிராமத்தில் இருந்து ஏராளமானோர் பால்குடங்களை சுமந்து வந்து தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர்.